துணிவு பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு… படக்குழுவினருக்கு கூலாக ரிப்ளை கொடுத்த நடிகர் AK….!!

Author: Babu Lakshmanan
31 October 2022, 7:09 pm
ajith - updatenews360.jpg 1
Quick Share

துணிவு பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் அஜித் பங்கேற்பார் என தகவல் வெளியாகி வந்த நிலையில், இது குறித்து நடிகர் அஜித் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் தனது 61வது திரைப்படமான ‘துணிவு’படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டது. தற்போது, படத்திற்கான டப்பிங் வேளைகள் மும்முரமாக போய் கொண்டிருக்கிறது.

இத்திரைப்படம் வரும் 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரை அரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.இந்த படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்துடன், துணிவு படம் போட்டி போடுவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் துணிவு படத்தின் புரொமோஷன் பணிகளில் நடிகர் அஜித் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அண்மையில் தகவல் வெளியானது. இதனால், பட ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத நடிகர் அஜித்தை, மீண்டும் படத்தின் நிகழ்ச்சியில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில், இந்த தகவல் முற்றிலும் உண்மையற்றது என அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில், “ஒரு நல்ல படத்திற்கு அதுவே விளம்பரம்! – நிபந்தனையற்ற அன்பு! அஜித்” என பதிவிட்டுள்ளார்.

Views: - 435

2

2