இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியறுவது இவரா..? கசிந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
18 December 2021, 7:31 pm
Quick Share

100 நாட்கள் நிகழ்ச்சியான பிக் பாஸ் முடிவடைய இன்னும் 4 வாரங்களே உள்ளது. இதனால், போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. அதேவேளையில், பிக்பாஸின் டாஸ்க்குகளும், அதனால் பிக் பாஸ் வீட்டில் வெடிக்கும் மோதல்களும் ரசிகர்களிடையே மேலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளில் வெற்றி பெறுபவர்கள், நாமினேஷனில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என பிக்பாஸ் அறிவித்த பிறகு, சிபி, சஞ்சீவ், தாமரை, நிரூப் மற்றும் அமீர் ஆகியோர் அந்த ஆஃபரை தட்டிச் சென்று விட்டனர்.

இதனால், ராஜு, அக்சரா, வருண், பாவனி, அபினய், பிரியங்கா என பிற ஹவுஸ் மேட்ஸ் நாமினேஷனில் இடம்பிடித்தனர். அதிலும், குறைந்த வாக்குகள் பெற்ற வருண் மற்றும் அபினய் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அபினய் வெளியேறியள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Views: - 313

2

0