கார் மீது நேருக்கு நேர் மோதிய பைக் : பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2021, 4:12 pm
Accident CCTV - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே கார் மற்றும் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் குடியிருப்பை சேர்ந்தவர் குமார். இவர் பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இன்று மதியம் உணவகத்தில் பணிபுரிய தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது தொட்டம்பாளையம் பாலம் அருகே வந்த நான்கு சக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி கீழே விழுந்தார்.

இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. பலத்த காயமடைந்த குமார் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பவானிசாகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 329

0

0