பைக்கில் சென்ற வாகன ஓட்டி லாரி சக்கரத்தில் சிக்கி விபத்து : கால் துண்டான அதிர்ச்சி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2021, 7:51 pm
Bike accident -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் சாலையில் தவறி விழுந்த போது எதிரே பாறை கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி வாலிபரின் மேல் ஏறி இறங்கிய சம்பவத்தில் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கீழ்குளம் அருகே பாரக்கன்விளை பகுதியை சேர்ந்தவர் சஜின் (வயது 32). ஆட்டோ ஓட்டும் தொழிலாளரான இவர் நேற்று ஹெலன்நகர் பகுதியில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளார்.

அப்போது இனையம் தோப்பு திருப்பு பகுதியில் வைத்து சஜின் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அந்த நேரத்தில் எதிரே பாறை கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி சஜினின் மேல் ஏறி இறங்கியதில் சஜினின் கால் துண்டிக்கப்பட்டது.

உடனே அருகில் இருந்தவர்கள் சஜினை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனப். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விபத்து குறித்த பரபரக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 340

0

0