வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக்குகளுக்கு தீவைப்பு : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

7 July 2021, 3:44 pm
Quick Share

விருதுநகர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இரண்டு இருசக்கர வாகனத்திற்கு தீவைத்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேலகாந்திநகரில் வசித்து வருபவர் அரிராமர் (58). இவர் கோவில் பூசாரியாக உள்ளார. இவர் வீட்டின் முன்பு நேற்று இரவு இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது நிறுத்தி இருந்த இரண்டு இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். அதில் இரண்டு வாகனங்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அரிராமர் கொடுத்த புகாரில் சாத்தூர் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Views: - 151

0

0