பத்தே நிமிடத்தில் பைக் திருட்டு.. காட்பாடி ரயில்நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம் : வைரலாகும் சிசிடிவி காட்சி!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 October 2023, 7:17 pm

பத்து நிமிடத்தில் பைக் திருட்டு.. காட்பாடி ரயில்நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம் : வைரலாகும் சிசிடிவி காட்சி!!!

இராணிப்பேட்டை மாவட்டம் தெங்கால் அவரக்கரை பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் இவர் கிரேன் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.

இன்று அதிகாலை சுமார் 12.30 மணி அளவில் தனது நண்பரை இராணிப்பேட்டையில் இருந்து வேலூர் மாவட்டம் காட்பாடி இரயில் நிலையத்திற்கு வழி அனுப்ப வந்தார்.

அப்பொழுது காட்பாடி ரயில் நிலையம் எதிரில் தனது ஸ்ப்ளெண்டர் (SPLENDER) இருசக்கர வாகனத்தை நிறுத்தி தனது நண்பரை வழி அனுப்பி வைத்து விட்டு திரும்பி வந்து பார்த்த போது தனது இருசக்கர வாகனம் காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ரயில் நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் தனது இருசக்கர வாகனத்தை தேடியும் பார்த்துள்ளார். இதனையடுத்து தனது இருசக்கர வாகனம் திருடு போயிருந்ததை அறிந்த பிரசாந்த் அருகில் உள்ள காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

தற்போது பிரசாந்தின் இரு சக்கர வாகனத்தை மர்மநபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://vimeo.com/876675089?share=copy

மேலும் காட்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வீடு புகுந்து நகை பணம் கொள்ளை, இருசக்கர வாகன திருட்டு, போன்ற தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் பெரும் பீதி அடைந்து வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!