எல்லாமே டூப்ளிகேட்.. மாமன்ற உறுப்பினராக செயல்பட ஓபிஎஸ் அணியை சேர்ந்த பெண் நிர்வாகிக்கு தடை!!

Author: Udayachandran RadhaKrishnan
21 October 2023, 7:48 pm

ஓபிஎஸ் அணியை சேர்ந்த பெண் மாமன்ற உறுப்பினராக செயல்பட தடை : நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!

காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தேர்தலில் 27 வது வார்டு உறுப்பினராக தென்னை மரம் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஷாலினி வேலு.

இவருக்கு போட்டியாக அதே வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் விஜயகுமாரி. ஷாலினி வேலு மாமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றதால் இவர் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 27 வது வார்டு மாமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தார். மாமன்றத்தில் நடக்கும் கூட்டங்களிலும் பங்கேற்று வந்தார்.

மேலும் இவர் தற்போது அதிமுக ஓபிஎஸ் அணியின் காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இவர் மாமன்ற உறுப்பினருக்கான தேர்தலின் போது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்ற போலியான சாதிச்சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார் என்றும் இவரது வெற்றி செல்லாது எனவும் அவருக்கு எதிராக திமுக சார்பில் போட்டியிட்ட விஜயகுமாரி காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி யு.செம்மல் அவர்கள் முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணைக்கு ஷாலினி தரப்பில் ஆஜர் ஆகவில்லை என கூப்படுகிறது.

வழக்கு விசாரணைக்கு ஷாலினி வேலு ஆஜராகாத நிலையில், எதிர் தரப்பில் தற்போதைக்கு இவர் மாமன்ற உறுப்பினராக நீடிக்க தடை விதிக்க கோரி தடை ஆணை கோரப்பட்டது .

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியின் 27-வது வார்டு மாமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்த ஷாலினி வேலு மாமன்ற உறுப்பினர் பதவியை தொடர தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சி சார்ந்த மாமன்ற கூட்டங்களிலும் பங்கேற்க தற்காலிகத் தடை விதித்து மாவட்ட நீதிபதி யு.செம்மல் தீர்ப்பளித்துள்ளார்

  • New Update Announcement From Jana Naygan team Today ஜனநாயகன் படத்தின் மாஸ் அப்டேட்.. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!