‘பாரத் மாதா கி ஜே’ கோஷம் ஒருபுறம்…’ஜெய் பீம்’ கோஷம் மறுபுறம்: விமான நிலையத்தை அதிர வைத்த பாஜக-விசிக தொண்டர்கள்..!!

Author: Rajesh
13 March 2022, 11:47 am
Quick Share

கோவை: விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பாஜகவினர் மாறி மாறி முழக்கங்களை எழுப்பி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனும், அதேபோல் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் கோவைக்கு வருகை தந்துள்ளனர்.

கோவை விமான நிலையத்திற்கு இருவரும் வந்த நிலையில் திருமாவளவனை வரவேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்களும் தமிழிசை சவுந்தரராஜனை வரவேற்க பாஜகவினரும் கூடியிருந்தனர்.

முதலில் விமான நிலையத்தில் இருந்து வெளிவந்த தொல் திருமாவளவனை அவர்களது தொண்டர்கள் அழைத்துச் சென்ற பொழுது எழுச்சி செம்மல் என்ற கோஷங்களை எழுப்பினர். அதேசமயம் விமான நிலையத்தில் இருந்து வந்த தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்கும் விதமாக பாஜகவினர் பாரத் மாதா கி ஜே என்ற முழக்கங்களை எழுப்பினர்.

இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஜெய்பீம் என்ற முழக்கங்களை எழுப்பினர் பாஜகவினரும் பாரத் மாதா கி ஜே என்ற முழக்கங்களை எழுப்பினர். இரு கட்சியினரும் மாறி மாறி அவர்களது முழக்கங்களை எழுப்பிக் கொண்டால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Views: - 367

0

0