பாஜக – அதிமுக இணைந்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் : பாஜக தேசிய தலைவர் நட்டா அறிவிப்பு!!

30 January 2021, 9:07 pm
Madurai Natta - Updatenews360
Quick Share

மதுரை : பாஜக என்னும் தேசிய நீரோட்டத்துடன் அதிமுக இணைந்தால்தான் தமிழகத்தில் பல நல்ல திட்டங்கள் கிடைக்கு என பாஜக தேசிய தலைவர் நட்டா தெரிவித்துள்ளார்.

மதுரையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட பாஜக தேசிய தலைவர் நட்டா, பிரச்சார கூட்டத்தில் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது, மாநில தலைவர் முருகன் இந்த கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார். மதுரையில் பேச வாய்ப்புகிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

மதுரை மீனாட்சியம்மனின் ஆசிர்வாதம் கிடைத்துள்ளது மீனாட்சியம்மனின் ஆசிர்வாதம் பாஜகவின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இன்று தைபூசம் முடிவடைந்த அடுத்தநாளான காந்தியின் நினைவுநாளான காந்தி மேலாடை அணிந்த மதுரையில் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

திருவிளையாடல் நடந்த மதுரை பெண்கள் முன்னேற்றத்திற்கான வரலாற்று நகரம் , ராணிமங்கம்மாள், திருவள்ளுவர் வளர்ந்த மதுரை. தமிழ் உலகின் பழமையான மொழி , சேர, சோழ பாண்டியர்களின் நிலம் தமிழக நிலம் தமிழக பண்பாட்டை கலாச்சாரத்தை மேம்படுத்த ஆட்சி செய்தனர்.

தமிழகம் என்பது பண்பாட்டை போற்றி பொருளாதாரத்தை வளர்த்துவருகிறது தமிழகம். மோடி செல்லும் இடமெல்லாம் தமிழ்மொழி குறித்தும் திருக்குறளையும் பேசிவருகிறார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகளை கனியன் பூங்குன்றனாரின் வரிகளை மோடி அனைவரிடத்திலும் எடுத்துசென்றார்.

திருவள்ளுவரின் திருக்குறள்கள் ராணுவ வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. மோடி ஆட்சியில் தமிழகத்திற்கு 14வது நிதி கமிசன் மூலம் 5லட்சத்தி 42ஆயிரத்தி 48கோடி வழங்கப்பட்டுள்ளது. மோடி அரசு தமிழகத்தின் நெசவுதொழிலுக்கு அதிக நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது., தமிழகத்தில் மோடி ஆட்சியில் தான் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது.

மோடி ஆட்சியின் திட்டங்கள் ஏழைகளை அதிகாரம் படைத்தவர்களாக மாற்றும் திட்டங்கள், தமிழகத்தில் 56லட்சம் கழிப்பறைகள், 95லட்சம் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது, உஜ்வாலா திட்டத்தில் 30லட்சம் மகளிர் பயன் அடைந்துள்ளனர். தமிழக மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை வழங்கியுள்ளது மோடி அரசு.

தமிழகத்தில் 35லட்சம் விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் நிதி வழங்கப்பட்டுள்ளது. மோடியின் ஆட்சியில் தமிழகத்திற்கு அதிக புதிய மருத்துவகல்லூரிகளுக்கு அனுமதி அளித்துள்ளார், 30ஆயிரம் கோடி ரயில்வே திட்டம், அதிக ஸ்மார்ட் சிட்டி மற்றும் எய்ம்ஸ் உருவாக காரணம் நான் அல்ல மோடி தான்மதுரைக்கு எய்ம்ஸ் கொடுத்தார் எய்ம்ஸ் மூலமாக ஆண்டுதோறும் 100மருத்துவர்கள் உருவாகுவார்கள்.

திமுக தமிழர்விரோத , தேசவிரோத போக்கை கையாண்டு வருகிறது, பாஜகவினர் கையில் வேலை எடுத்து தமிழக கலாச்சாரத்தை காத்துள்ளோம். கலாச்சார பண்பாட்டிற்கு எதிரானவர்களாக இருந்த திமுகவினர் தற்போது கையில் வேல் ஏந்தும் நிலை உருவாகியுள்ளது.

மாநிலங்களுக்கான தேவைகளை தேசியத்தோடு இணைந்து பெற வேண்டும் என எம்.ஜி.ஆரும், ஜெயல்லிதாவும் செயல்பட்டார்கள்,வரும் தேர்தலில் பாஜகவுடன் அதிமுகவுடன் கூட்டணி உறுதி, பாஜகவும் அதிமுகவும் தேச வளர்ச்சி போன்று தமிழக வளர்ச்சியிலும் சேர்ந்து பயணிப்போம்.

தமிழக கலாச்சாரத்தை பாஜக மட்டுமே பாதுகாக்கும், தமிழக மக்கள் பாஜக ஆதரவு அளிக்க வேண்டும். தமிழகத்தை தேசிய நீரோடையில் இணைக்க பாஜகவிற்கு ஆதரவளிக்க வேண்டும். இந்த கூட்டம் வாக்குகளாக மாற பாஜகவினர் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Views: - 0

0

0