கட்சியில் இணைந்து 10 மாதத்தில் வெளியேற்றம் : சர்ச்சை வீடியோவால் மதன் ரவிச்சந்திரன் நீக்கப்படுவதாக பாஜக அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2021, 3:19 pm
Madhan - Updatenews360
Quick Share

கே.டி. ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரனின் ‘Madan Diary’ என்ற யூ டியூப் சேனல் முடக்கிய நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது.

பாஜகவின் மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன் பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. கே.டி. ராகவனுக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.டி. ராகவன் அறிவித்தார். இந்த விவகாரத்தால் கொந்தளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனி விசாரணை குழு ஆணையம் பாஜக சார்பாக அமைத்தார்.

இந்த நிலையில் மதன் ரவிச்சந்திரன் என்ற யூ-டியூபர் கே.டி.ராகவன் தொடர்பான வீடியோவை வெளியிட்டார். அவர் நடத்தி வரும் ‘Madan Diary’ என்ற யூ-டியூப்பில் கே.டி.ராகவன் தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக மாநில தலைவர் அண்ணாமலை சொல்லித்தான் இந்த வீடியோவை வெளியிட்டதாகவும், அது தொடர்பான வாட்ஸ்ஆப் ஸ்கிரீன்ஷாட்டையும் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டார்.

பாஜகவில் உள்ள பல தலைவர்களின் வீடியோக்களும் இனி வரும் நாள்களில் வெளியாகும் என மதன் ரவிச்சந்திரன் தெரிவித்து இருந்த நிலையில், மதன் ரவிச்சந்திரனின் ‘Madan Diary’ என்ற யூ டியூப் சேனல் முடங்கியது.

இந்த நிலையில் பாஜக கொள்கைகளுக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்து தெரிவித்துள்ள மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக மாநில செயலாளர் கரு.நாகராஜன் அறிவித்துள்ளார்.

கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், அவர்களிடம் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக கரு.நாகராஜன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்போடர் மாதம் மதன் ரவிச்சந்திரன் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 369

0

0