‘வாங்க ஜி வாங்க’… மதுரையில போட்டியிடலாம் : பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து போஸ்டர் ஒட்டிய பாஜக விசுவாசி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 May 2022, 6:29 pm
Modi - Updatenews360
Quick Share

நாளை தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். முன்னதாக ஐதராபாத்தில் உள்ள இந்திய ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்வி நிறுவனத்தின் 20வது ஆண்டு விழாக்கொண்டாட்டத்தில் பங்கேற்கும் அவர் மாலை சென்னைக்கு வருகிறார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரயில்வே துறையில் புதிய திட்டங்கள் என 31 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களுக்கான பணிகளை அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் மோடி தமிழகம் வருவதை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மதுரை மாநகர் பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட அந்த போஸ்டரின், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி மதுரையில் போட்டியிட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

Madurai bjp Call for PM Narendra Modi to contest in Madurai upcoming parliament election viral Poster

அதுமட்டுமின்றி, 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில் இப்போதே பாஜகவுக்கு வெற்றி என்ற வகையில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். பிரதமர் மோடியை வரவேற்க மதுரையில் இருந்து 500 நபர்களை வேன்களிலும், பேருந்துகளிலும் திரட்டி சென்னைக்கு அழைத்து செல்கிறார் சரவணன்.

ஏற்கனவே வயநாட்டில் போட்டியிட்டு வெற்றி கண்ட ராகுல்காந்தி வரும் 2021 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடுகிறார் என்ற தகவல் பரவி வரும் நிலையில் பாஜகவினர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Admin அந்த வீடியோவை பதிவிட்டது அட்மின்.. ஆனால் இதைவிட அசிங்கம் வேறு எதுவுமில்லை : திருமாவளவன் ஆவேசம்!
  • Views: - 732

    0

    0