‘அரிசி எதுல விளையுதுனு ஸ்டாலினுக்கு தெரியுமா‘? : ஹெச். ராஜா கடும் விமர்சனம்!!

Author: Udayachandran
2 October 2020, 7:38 pm
H Raja - updatenews360
Quick Share

பெரம்பலூர் : அரிசி எதில் விளைகிறது என்று தெரியாத திமுக ஸ்டாலின் விவசாயத்தை பற்றி பேசுவது நகைப்புக்குரியது என பெரம்பலூரில் பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பாரதீய ஜனதா கட்சியின் மண்டல் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா தெரிவிக்கும்போது, விவசாயிகளின் நலன் காக்கவே அவர்கள் பொருளுக்கு அவர்களே விலை வைத்து கொள்ள ஏதுவான ஒரு சட்டம் உண்மையான விவசாயிகள் இதை வரவேற்கின்றனர் என்றும், தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் பிற மாநிலங்களில் மக்கள் இதனை புரிந்து கொள்வார்கள் என்றும் கூறினார்.

வேளாண் விவசாயம் பற்றி தெரியாது, அரிசி எப்படி விளைகிறது என்று தெரியாத ஸ்டாலின் வேளாண் விவசாய சட்டத்தை பற்றி பேசுவது நகைப்புக்குரியது என்றும் தெரிவித்தார்.

மேலும் கிராம சபை ரத்து குறித்து கேள்விக்கு இதுவரை வீட்டை விட்டு வெளிவராத ஸ்டாலின் திமுக ஆளும் பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடத்துவது வீம்புக்கு செய்கின்ற செயல், வரவேற்கத்தக்கது அல்ல என்றும், எதிர்மறையான செயல்களால் திமுக சரிவை சந்திக்கும் என்றும் எச்சரித்தார்.

மேலும் நேற்று ராகுல் காந்தி கைது செய்யப்பட்டது தவறில்லை என்றும், பாபர் மசூதி இடிப்பு பிரச்சினையில் உண்மையான விஷயம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது அதன்பேரில் நீதி வழங்கப்பட்டு உள்ளது இது பைத்தியக்காரத்தனமான தீர்ப்பு என்று சில பைத்தியங்கள் சொல்லத்தான் செய்யும் அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது என்றும், உத்திரப்பிரதேச பாலியல் பிரச்சினைகள் ஏழு நாட்களில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மேலும், ராகுல் காந்தி நாடகமாடுகிறார் என்றும் இதனால் அவர் கைது செய்யப்பட்டது தவறு இல்லை என தெரிவித்தார்.

Views: - 48

0

0