அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக நிர்வாகி.. கூட்டணி முறிந்ததும் அதிமுகவுக்கு தாவல்.. காய் நகர்த்திய டாக்டர்!!!
Author: Udayachandran RadhaKrishnan6 October 2023, 2:26 pm
அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக நிர்வாகி.. கூட்டணி முறிந்ததும் அதிமுகவுக்கு தாவல்.. காய் நகர்த்திய டாக்டர்!!!
அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பாஜக உடனான கூட்டணி முறிவை உறுதிப்படுத்தியதுடன் 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அறிவித்தார்.
இந்த நிலையில் பாஜகவின் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் நிர்வாகிகள் அடுத்தடுத்து பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், பாஜகவின் மருத்துவர் அணி பொறுப்பாளர் டாக்டர் விஜயபாண்டியன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் சரவணன் அதிமுக மருத்துவர் அணியின் மாநில இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதற்காக நன்றி தெரிவிப்பற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
அப்போது, பாஜகவில் மருத்துவர் அணி மாநில தலைவராக இருந்த விஜயபாண்டியனையும் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது விஜயபாண்டியன், அதிமுகவில் இணைந்துள்ளார்.
ஏற்கனவே பாஜக தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் சமூக ஊடகப் பிரிவுத் தலைவராக இருந்த சி.டி.ஆர். நிர்மல் குமார், செயலாளராக இருந்த திலீப் கண்ணன், மற்றும் முக்கிய நிர்வாகிகளான அம்மு, கிருஷ்ணன், விஜய் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
தொடர்ந்து பாஜகவின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஓபிசி பிரிவு துணைத் தலைவராக இருந்த கோமதி அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்திருந்தார்.
பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய டாக்டர் சரவணன் கமுக்கமாக காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
0
0