அண்ணாமலை கூட்டத்தில் ‘காவாலா’ பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட பாஜக நிர்வாகிகள் ; வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
17 October 2023, 8:31 am

கோவை ; மேட்டுப்பாளையத்தில் அண்ணாமலையின் யாத்திரை நிகழ்ச்சி முடிந்து மேடையில் காவலா பாட்டுக்கு பாஜக நிர்வாகிகள் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாரதி ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் என்மன் என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சியானது மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல் மற்றும் எல் முருகன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்று யாத்திரையை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் அனைவரும் பேசிய பிறகு கூட்டம் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து, அங்கிருந்து முக்கிய பிரமுகர்கள் அனைவரும் சென்ற நிலையில், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பாரதி ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மட்டும் மேடையில் நின்றிருந்தனர்.

https://player.vimeo.com/video/875024835?badge=0&autopause=0&quality_selector=1&progress_bar=1&player_id=0&app_id=58479

அப்பொழுது மேடையில் அண்மையில் ரஜினி நடித்த வெளியான ஜெயிலர் படத்தில் பிரபலமான பாடலாக உள்ள காவலா பாட்டை போட்டு அதற்கு நிர்வாகிகள் குத்தாட்டம் போட்டனர்.மேலும், ஒருவருக்கொருவர் மாலை அணிவித்து தங்கள் மகிழ்ச்சி சசியை வெளிப்படுத்தி உற்சாகமாக நடனமாடினர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!