நள்ளிரவில் பாஜக பிரமுகர் வெட்டிப் படுகொலை… ; திமுக நிர்வாகி மீது உறவினர்கள் புகார் ; நெல்லையில் பதற்றம்..!!!

Author: Babu Lakshmanan
31 August 2023, 12:05 pm

நெல்லை – பாளையங்கோட்டை அருகே பாஜக பிரமுகர் நேற்று நள்ளிரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மூளிகுளத்தைச் சேர்ந்தவர் ஜெகன் (34). இவர் நெல்லை மாவட்ட பாஜக இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு மூளிக்குளம் கடைவீதியில் தனது நண்பர்களுடன் பேசிவிட்டு, வீட்டிற்குக் கிளம்பி சென்றுள்ளார்.

அப்போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜெகனை கொடூரமாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஜெகனை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே ஜெகன் பரிதாபமாக பலியானார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் 6 பேரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக கட்சியின் பிரமுகர், வெட்டிக்கொலைச் செய்யப்பட்டதையடுத்து, அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை படுகொலை செய்யப்பட்ட ஜெகனின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் கடுமையான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி கைது செய்ய முயற்சித்த போது, எதிர்ப்பு தெரிவித்ததால் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.

ஜெகனின் உறவினர்கள் உண்மையான குற்றவாளியான திமுகவை சேர்ந்த பிரமுகர் பிரபு என்பவரை கைது செய்தால் தான் போராட்டத்தை கைவிடவும், இறந்தவரின் உடலை பெறுவோம் என தெரிவித்தனர்.

  • cooku with comali season 6 contestants list குக் வித் கோமாளியில் சிறகடிக்க ஆசை நடிகரா? இணையத்தில் லீக் ஆன போட்டியாளர்களின் பட்டியல்!