‘அவர் வாய் திறந்தால் நாங்க ஜெயிச்சிட்டோம்.. அவர் மட்டும் தான் எங்க பிரச்சார பீரங்கி’ : கிண்டலடித்த அண்ணாமலை!!

Author: Babu Lakshmanan
9 February 2023, 7:43 pm
Quick Share

சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்களுக்கு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தான் பிரச்சார பீரங்கி என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கிண்டலாக கூறியுள்ளார்.

தமிழக பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் சார்பில் 10 லட்சம் மரங்கள் நடும் தொடக்க நிகழ்ச்சி பாலவாக்கம் கடற்கரை அருகே நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று மரங்களை நட்டும் நிகழ்ச்சியை தொடங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- ராஜீவ்காந்தி அக்காட், ஜெயவர்த்தனா அக்கார்ட் வந்ததுக்கு பிறகு 13வது அமென்ட் என்பதே பெயரளவு தான் உள்ளது. எந்த அளவுக்கு பிரச்சினை உள்ளது என்பது இலங்கை போகும்போது தான் தெரியும். பெயரளவுக்கு மட்டும்தான் 13வது அமெண்ட்மெண்ட் இருந்தது. தற்போது உள்ள நமது அரசு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜி அவர்கள் ஆக்ரோஷமாக கடுமையாக செயல்பட்டு வருகிறார். இதற்கான நேரம் வந்துவிட்டது இது சரியான நேரம் என்று கையில் எடுத்துள்ளார்.

அதேபோல், தமிழக பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை இலங்கை தமிழர்களுடன் ஒரு நட்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது மலையாள தமிழர்களுக்காக போராட இருக்கின்ற கட்சியாக இருக்கட்டும், வடக்கு கிழக்கு தமிழர்களுக்காக போராடக்கூடிய கட்சியாக இருக்கட்டும் அனைவருடன் நட்புறவை ஏற்படுத்தி வருகிறோம்.

பிப்ரவரி நான்காம் தேதி இலங்கையின் சுதந்திர தின விழா. இலங்கை அரசு மூன்று இடத்தில் கொண்டாடியது. வருகின்ற 11ம் தேதி ஜப்னாவில் கொண்டாட உள்ளனர். பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடைசியாக 2014ஆம் ஆண்டு சென்றபோது, ஜப்னாவிற்கு இந்தியா, இலங்கை தமிழர்களின் கலாச்சார மையத்திற்காக நாம் நிதி கொடுத்து, அதை யாழ்ப்பாணத்தில் அற்புதமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

உலகத்தில் அது போன்ற கலாச்சாரம் இருக்காது. தமிழர்களின் தொன்மையை பறைசாற்றும் வகையில், ஒரு மையம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதனுடைய திறப்பு விழா வருகின்ற 11ஆம் தேதி இலங்கையின் பிரதமர் ரனில் விக்ரம் சிங் துவக்கி வைக்கிறார். அதற்கு மத்திய அரசு சார்பில் மத்திய அமைச்சர் முருகன் கலந்து கொள்கிறார்.

அதேபோல், இலங்கையில் உள்ள பல்வேறு கட்சிகள் அழைப்பை நேற்று மத்திய அமைச்சருடன் நானும் ஜப்னாவிற்கு பயணம் மேற்கொள்கிறோம். இந்த பயணத்தின் போது அங்குள்ள கட்சிகளுடன் இணைந்து சில விஷயங்களை பேச உள்ளோம். இலங்கையில் இருக்கக்கூடிய வடக்கிழங்கு இருக்கக்கூடிய தமிழ் கட்சிகள் அனைவருமே இந்த கோரிக்கையை பொறுத்தவரை ஒன்றாக இருக்கிறார்கள்.

அதே போல், மத்திய இணை அமைச்சர்கள் அவர்கள் இலங்கையில் உள்ள 118 படகுகள் அங்கு உள்ளது. அந்த படகுகளை விரைந்து விடுவிக்க பேச உள்ளார். மீன்வளத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துள்ளார். காலம் காலமாக இருக்கக்கூடிய மீனவர்கள் பிரச்சனை போர்க்கால அடிப்படையில் 2014க்கு பிறகு எப்படி நமது அரசு வேகமாக விரைந்து செயல்பட்டு, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை கொண்டு வருகிறோம் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

பார்டரில் 2011க்கு பிறகு துப்பாக்கி சூடுகள் கடுமையாக குறைந்துள்ளது என பல பத்திரிக்கைகளில் தொகுப்பு பக்கம் வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் பேச்சை மட்டும் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இலங்கை தமிழர்களாக நாங்கள் அதை செய்கிறோம், இது செய்கிறோம் என்று காலம் காலமாக செய்கிறார்கள்.

ஆனால், பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை தீர்க்கமாக ஒரு ஒரு படியாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இலங்கைக்கு சென்றால் வடகிழக்கு பகுதிகள் மலையாளத் தமிழர்களுக்காக நல்ல விஷயங்களை அரசு செய்துள்ளது. 60,000 வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளது.

நாம் செல்லுகின்ற விமானம் ஜப்னாவில் தரை இறக்குகிறார்கள். அந்த விமான நிலையத்தை கட்டிக் கொடுத்தவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். இல்லையென்றால் காரில் சென்று கொழும்பு சென்று எட்டு மணி நேரம் ஆகும். சென்னைக்கும், ஜப்பனாவுக்கும் கலாச்சார அடிப்படையில் ஒரு விமான சேவை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதை ஏற்றுக்கொண்டு கடந்த இரண்டு மாதங்களாக முதல்முறையாக சென்னையில் இருந்து ஜப்னாவிற்கு விமான சேவையும் ஆரம்பித்துள்ளது. அந்த விமானத்தில் தான் நாங்கள் செல்ல உள்ளோம்.

அதிக நபர்கள் கப்பலில் செல்ல ஆசைப்படுவார்கள். அதற்காகவும் கோரிக்கை வைத்துள்ளோம். அதுவும் வேகமாக துறைமுகம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்கான நிதியும் பாரத பிரதமர் வழங்கி உள்ளார். விரைவில் தமிழகத்திற்கும், இலங்கைக்கும் ஒரு கப்பல் சேவை தொடங்க உள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இதை சொல்வதற்கு கடமைப்பட்டுள்ளேன். காரணம், பாரதிய ஜனதா கட்சி வெறும் பேச்சாக இருக்காது, செயலாக தான் செயல்படும். இங்குள்ள கட்சிகள் வெறும் வாய்சாவடல்கள் மட்டும் விடுகிறார்கள். இன்னும் ஒரு ஆண்டுகள் 2024 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு மக்கள் நலனுக்காக பல விஷயங்களை செய்துள்ளது.

கொழும்பு ஜப்னாக்கான ரயில்வே அமைப்பதற்கும் ஆறு மாதத்திற்கு முன்பு ரயில் சேவை தொடங்குகிறது. அதற்கான நிதியும் இந்திய அரசு வழங்கி உள்ளது. கடந்த 1.5 வருட காலங்களில் 2.1 மில்லியன் டாலருக்கு மேல் இலங்கைக்கு மத்திய அரசு நிதி உதவி செய்துள்ளது. தமிழர்கள் பாதிக்கப்பட கூடாது, பொருளாதாரம் பிரச்சனையில் எந்தவித பிரச்சனைகளும் வரக்கூடாது என்பதற்காக.

ஈரோடு கிழக்கு இன்று மாலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் உள்ளது. இபிஎஸ் அவர்கள் அழைத்திருந்தார்கள். தேர்தல் பொறுப்பாளர் செங்கோட்டையன் அழைத்து இருந்தார்கள். இன்று இலங்கை செல்லும் காரணத்தினால் கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கட்சி சார்பில் பங்கேற்பார்.

வருகின்ற காலத்தில் அனைவரும் மிக மிக தீர்க்கமாக அனைவரின் உயிரை கொடுத்து பாடுபட்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற உறுதியாக வேலை செய்வோம். நானும் கர்நாடகா தேர்தல் கோ இன்சார்ஜ் ஆக போட்டுள்ளனர். கர்நாடகாவில் தேர்தல் நடைபெற உள்ளது.

பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு அன்று பார்ப்பீர்கள் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் வெற்றி வேட்பாளராக மாறி வருவார் என்பதில் எந்த ஒரு சின்ன கடுகளவு கூட சந்தேகம் இல்லை என்றார். நானும் பிரச்சாரத்தில் கலந்து கொள்வேன். இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வந்து ஆதரவு கேட்டு சென்றுள்ளார். பாஜகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர்.

அதிமுக அவங்க தேதி அறிவிக்க வேண்டும். அதேபோல் கர்நாடகாவின் தேர்தல் வேலை அங்கு நடைபெற உள்ளது. அங்கு சூடு பிடிக்க ஆரம்பித்ததால் அங்கும் செல்ல வேண்டும். முதல் முன்னுரிமை அதிமுகவின் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற வைப்பது.

ஒரு கூட்டணி தர்மத்தின் படி கட்சி வேட்பாளர் களம் இறக்கி உள்ளோம். ஜெயிக்க வைப்பது நம்மளுடைய பொறுப்பு. தார்மீக கடமை, அதை பாரதிய ஜனதா கட்சி செய்யும். இடைத்தேர்தலுக்கு முதலமைச்சர் பயந்து அனைத்து அமைச்சர்களையும் களம் இறக்கி உள்ளார்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து திமுகவினர்களும், ஈரோடு கிழக்கு தேர்தலுக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். தமிழக சரித்திரத்தில் ஒரு ஆளுங்கட்சி இப்படியொரு இடைத்தேர்தலை சந்தித்தது சரித்திரம் இல்லை. அதை பார்க்கும்போது மிகத் தெளிவாக தெரிகிறது. திமுகவிற்கு பயம் வந்துள்ளது.

39 லோக்சபா எம்பிகளில் 38 திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றனர். அதில் ஒரே ஒரு வேட்பாளர் மற்றும் தோற்றுவிட்டார். அந்த வேட்பாளர்தான் ஈரோடு கிழக்கு தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளர். இடைத்தேர்தல் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வாய் திறந்தால் எதிர்க்கட்சிக்கு ஓட்டுகள் அதிகமாகிவிடும்.

நம்முடைய பிரச்சார பீரங்கி அண்ணன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான். அவர் பேச ஆரம்பித்தால் இளையராஜாவை திட்டினார், பிற்படுத்தப்பட்டோரை திட்டி உள்ளார், தாழ்த்தப்பட்டவரை திட்டினார். ராகுல் காந்தி அவர்கள் எங்களுடைய பிரச்சார பீரங்கியாக 2014, 2019 இருந்தாரு. அதே போல், 2023 ஈரோடு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அண்ணன் அப்படித்தான் இருப்பார்.

அங்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அண்ணன் பேச ஆரம்பித்தால் எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டு வந்துவிடும். அவரே பேசுகிறார் ஆடியோவில் எங்கு பணத்தை கொடுக்கலாம் என்று. நான் பெரிய மனுஷன் என்று கூறிக் கொண்டவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும். நான் விவசாயி மகன் : அண்ணாமலை.

தமிழக அரசியலை பண்ணையார் அரசியலாக மாற்றியுள்ளனர். என்னைப் பொருத்தவரை சாமானியர்களின் அரசியலாக மாற்றிக் கொண்டிருக்கிறோம், என தெரிவித்துள்ளார்.

Views: - 274

0

0