பாமக தேர்தல் அறிக்கை … சூப்பரா…? சுமாரா..? என்ன சொல்கிறார் பாஜக தலைவர் எல்.முருகன்!!!

5 March 2021, 6:58 pm
l murugan - - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : பாமகவின் தேர்தல் குறித்து பாஜக மாநில தலைவர் முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி பகுதியில் குளச்சல் சட்ட மன்ற தொகுதி பூத் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் முருகன் கலந்து கொண்டார்.

அப்போது, அவர் செய்தியாளர்களை சந்திக்கும் போது கூறியதாவது :- ஒவ்வொரு கட்சியும், தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வரும் நிலையில், பாமக வெளியிட்டு உள்ள தேர்தல் அறிக்கையை வரவேற்கிறோம். சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்ததை வரவேற்கிறோம். அதேவேளையில், அவர்களது ஒரே நோக்கம் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பது. எங்களது நோக்கமமும் அதுவே. எனவே அவர்களது கருத்தையும் வரவேற்கிறோம்.

தமிழக மீனவர்கள் இலங்கை கபாஜகடற்படையால் கொல்லப்பட்ட சம்பவங்கள் ஏராளம் நடைபெற்றது. ஆனால் 2014-ம் ஆண்டுக்கு பிறகு அது போன்ற நிகழ்வுகள் நடைபெறவில்லை. தற்போது, நடந்த 4 மீனவர்கள் மரணம் அடைந்த சம்பவம் கூட விபத்து என இலங்கை அரசு கூறுகிறது. ஆனால், வெளியுறவுத்துறை மூலம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம், எனவும் அவர் கூறினார்.

Views: - 17

0

0