பாஜக பிரமுகர் விஷம் அருந்தி தற்கொலை… மன உளைச்சல் கொடுத்த அதிகாரிகள் : குடும்பத்தினர் பகீர் புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2023, 1:26 pm

பாஜக பிரமுகர் விஷம் அருந்தி தற்கொலை… மன உளைச்சல் கொடுத்த அதிகாரிகள் : குடும்பத்தினர் பகீர் புகார்!!

தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் சங்குப்பட்டி ஊராட்சி தலைவர் ராதா பாஜக அறிவுசார் பிரிவு மாவட்ட துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.

அவருக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் ராதா விஷமருந்து தற்கொலைக்கு முயன்றார்.

மயக்க நிலையில் இருந்து அவரை குடும்பத்தினர் மீட்டு சங்கரன்கோவில் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராதா நேற்று உயிரிழந்தார். இது குறித்து திருவேங்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே ஊராட்சியில் பல்வேறு பணிகளுக்காக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நிதி ஒதுக்காததால் தனது சொந்த பணத்தில் இருந்து பணிகளை மேற்கொண்ட ராதா, தொட்ந்து பணம் ஒதுக்காததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் உடலை வாங்குவோம் என உறவினர்கள் காவல்துறையிடம் தெரிவித்ததுள்ளதால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

  • raai laxmi open talk about relationship with dhoni  என் வாழ்க்கைல ஏற்பட்ட கறை? தோனியுடனான பிரேக் அப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் பிரபல நடிகை…