பாஜக முக்கியப் புள்ளி படுகொலை… நள்ளிரவில் பின்தொடர்ந்த கும்பல் வெறிச்செயல்!

Author: Udayachandran RadhaKrishnan
28 April 2025, 2:41 pm

புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார்.

கடநத் ஒரு வாரமாக மர்மநபர்கள் சிலர் இவரை பின் தொடர்ந்ததாக கூறபப்டுகிறது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு படுகொலை செய்யப்பட்டார்.

இவர் மீது தமிழ்நாடு, புதுச்சேரியில் பல்வேறு காவல் நிலையங்களில் பாலியல், வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகடள உள்ளதாக கூறப்படுகிறது

நேற்றிரவு லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் பிறந்தநாளையொட்டி காமராஜர் நகர் தொகுதியில் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளார் உமா சங்கர்.

நள்ளிரவு வீடு திரும்பிக்கெண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்த சுமார் 10க்கும் மேற்பட்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி சாய்த்துள்ளனர்.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!