வரும் 17ம் தேதி முதல் மீண்டும் வேல் யாத்திரை தொடரும்: தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு…!

12 November 2020, 3:15 pm
L Murugan - Updatenews360
Quick Share

சென்னை: வருகிற 17ம் தேதி முதல் மீண்டும் வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெறும் என்று பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

சென்னையில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது,

நவம்பர் 17ம் தேதி முதல் மீண்டும் வேல் யாத்திரை தொடரும். வேல் யாத்திரை டிசம்பர் 6ம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும். பல தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் யாத்திரையில் கலந்து கொள்ள இருக்கின்றனர். எவ்வளவு தடங்கல் வந்தாலும் திட்டப்படி வேல் யாத்திரை தொடரும்.

பாஜக தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாக கே.டி.ராகவன் சொன்னது சரிதான். வேல் யாத்திரைக்கு தடை விதிப்பதால் பாஜகவினர் அதிருப்தியில் இருப்பதாக கே.டி.ராகவன் கூறியிருந்தார். அதிமுக உடனான கூட்டணி வேறு, கொள்கைகள் வேறு. வேல் யாத்திரை மதம் சார்ந்த நிகழ்ச்சி அல்ல. கொரோனா முன்களப்பணியாளர்களை பாராட்ட, மத்திய அரசின் திட்டங்கள் பற்றி பேசவே வேல் யாத்திரை என தெரிவித்துள்ளார்.

Views: - 15

0

0