நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்… திமுகவின் ஏமாற்று செயல் ; பாஜக தலைவர் எல். முருகன் காட்டம்..!!!

11 May 2021, 12:38 pm
l murugan - updatenews360
Quick Share

சென்னை : நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர திமுக நினைப்பது ஏமாற்றும் செயல் என் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

16வது சட்டப்பேரவைக் கூட்டம் இன்று கூடிய நிலையில், வெற்றி பெற்ற 4 பாஜக எம்எல்ஏக்களை சட்டசபைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு சென்னையில் உள்ள கமலாலயத்தில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்திற்கு பிறகு, பாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, அவர் பேசுகையில், “பாஜகவின் வெற்றிக்கு வேல்யாத்திரையும் ஒரு காரணம். 4 எம்எல்ஏக்களை வெற்றி பெற வைத்த அந்தந்த மாவட்ட தலைவர்களுக்கு கட்சி சார்பில் இன்னோவா கார் பரிசு வழங்கப்படும். ட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர திமுக நினைப்பது ஏமாற்றும் செயல்,” எனக் கூறினார்.

Views: - 271

0

0