வெள்ளத்தில் சிக்கிய குழந்தை.. பத்திரமாக மீட்ட பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் : வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
18 December 2023, 8:54 pm

வெள்ளத்தில் சிக்கிய குழந்தை.. பத்திரமாக மீட்ட பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் : வைரலாகும் வீடியோ!!

கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.

நெல்லையின் மாநகரின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சில இடங்களில் கழுத்தளவுக்கு தண்ணீர் நிற்பதால் மக்களை மீட்கும் பணியும் நடைபெற்றது.

விடாது பெய்த மழையால் பல ஊர்கள் தனித்தீவுகள் போல மாறியுள்ளன. சாலைகள் வெள்ளத்தில் அடித்து துண்டிக்கப்பட்டதால் ஊர்களை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தத்தளித்து வருகிறார்கள்.

வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் தன்னார்வலர்களும் பேரிடர் மீட்பு குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். அரசு அதிகாரிகளும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் தண்ணீராய் காட்சி அளிக்கிறது. மின் தடையும் ஏற்பட்டுள்ளதால் தொலைத்தொடர்பும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, வெள்ளத்தில் சிக்கிய 4 மாத குழந்தையை பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் மீட்டுள்ளார்.

நெல்லையில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் அருகில் வெள்ளத்தில் தத்தளித்த இசக்கிமுத்துவின் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் பேரன் சிவகிருஷ்ணன் 4 மாத குழந்தையை நயினார் நாகேந்திரன் பத்திரமாக மீட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகளில் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!