திமுக எம்பி ஆ. ராசா மதமாற்றத்திற்கு தூண்டுகிறார்.. அம்பேத்கரின் கருத்தை திமுகவால் ஏற்க முடியுமா..? வானதி சீனிவாசன் கேள்வி..!!

Author: Babu Lakshmanan
26 September 2022, 10:08 pm

திமுக எம்பி ஆ.ராசா மதமாற்றத்திற்கு தூண்டுவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பகீர் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை சிவானந்த காலனி பகுதியில் பாஜக நிர்வாகிகள் தொண்டர்களை கைது நடவடிக்கை, திமுக அரசு, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம், ஆ ராசாவின் கருத்து உள்ளிட்ட சம்பவங்களை கண்டித்து பஜகவினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தேசிய மகளீரணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மூத்த தலைவர் சிபி ராதகிருஷ்ணன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் குண்டு வீசியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய், ராசவை கைது செய் உள்ளிட்ட பதாகைகள் ஏந்தி கண்டன கோசங்களையிட்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாஜக தொண்டர்களை போலீசார் முழு பரிசோதனைக்கு பின்பு அனுமதித்தனர்.

இதனை தொடர்ந்து மேடையில் பேசிய வானதி சீனிவாசன் எம்எல்ஏ, திமுக எம்பி ஆ.ராசாவின் கருத்துகளுக்கு இந்துகளுக்கு உடன்பாடில்லை. இந்துக்கடவுள்களை திமுகவினர் இழிவுபடுத்தி வருகின்றார். இந்து எதிர்ப்பு என்பதை கொள்கையாகவே திமுக வைத்துள்ளனர். இன்று நிலைமை மாறியிருக்கிறது. இந்துக்கள் ஆயிரக்கணக்கான பேர் நின்று திமுகவை எதிர்த்து கேள்வி கேட்போம்.

தமிழகத்தில் பாஜக உள்ளே வந்துவிடுவார்கள் என்ற நிலையில் மாற்றுக்கட்சிகள் பயந்துள்ளனர். அந்தளவிற்கு பாஜக வளர்ச்சி பெற்றுள்ளது. திமுக அரசியல் மேடையில் பேசுவதை, பெண்கள் உட்கார்ந்து கேட்க முடியாது. பாஜகவில் நாகரீகம் இருப்பதால் பெண்கள் உட்கார்ந்து கூட்டத்தில் கேட்க முடியும்.

தீண்டாமை என்ற மிகப்பெரிய கொடுமையை எதிர்த்து ஆர்எஸ்எஸ் , பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திமுக சாதியின் அடிப்படையில் சீட்டு வழங்குகிறது. சமுதாயத்தில் விளிம்பு நிலையில் இருப்பவர்களை தூக்கி விட பாஜக இருக்கிறது. சாதிக்கு எதிரானவர்கள் பாஜக. இந்து சமுதாயத்தில் தீய பழக்கம், மூட நம்பிக்கைகளை எதிர்த்து தமிழகத்தில் போராடியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் ராமனுஜர் குறிப்பிடத்தக்கவர்.

எல்.முருகனை மாநிலத் தலைவராகவும், பின் மத்திய அமைச்சராகவும் ஆக்கி, அழகு பார்த்தவர் பிரதமர் மோடி. திமுகவில் முதல்வர் நாற்காலியில் ஆ. ராசா உட்கார முடியாது. இதுதான் அவர்களின் சமூக நீதி. மதமாற்றத்திற்கு எதிராக மத மாற்றம் தவறானது என டாக்டர் அம்பேத்கர் சொன்னதை திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியுமா..? ஆ ராசா மதமாற்றத்திற்கு தூண்டுகிறார். இதற்கு பின்பாக யார் இருக்கிறார்கள் என கண்டுபிடிக்க வேண்டும். சகோதர, சகோதரிகளை தவறாக பேசுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

கோவை பாஜக மாநகர் மாவட்ட தலைவரை பொய்யாக, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இன்றைக்கு முதலமைச்சர் அறிக்கை கொடுத்திருக்கிறார். அவரது குடும்ப சேனல்கள்தான் அவரை பாராட்டுகின்றனர். உங்களை எங்க குளிப்பாட்டி, எங்கு வைத்தாலும் , முதலமைச்சர் மாற மாட்டார். கோவை மாநகரத்தில் போஸ்டர் ஒட்டக்கூடாது என ஆட்சியர் அனைத்து கட்சி கூட்டம் போட்டார். ஆனால் திமுகவினர் ஒட்டிய போஸ்டருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை. முதலமைச்சர், சட்ட விரோதமாக திமுகவின்ர் வைத்திருக்கக்கூடிய பிளக்ஸ் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க முடியுமா?, என்று கேள்வி எழுப்பினார்.

  • wine party right after the wedding... Netizens shower Priyanka திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!