‘பொண்டாட்டிய கூட’… இத நான் சொல்லல, அவருதான் சொன்னாரு… திமுக எம்பி ஆ.ராசாவுக்கு அண்ணாமலை கொடுத்த பதிலடி!!

Author: Babu Lakshmanan
26 September 2022, 9:43 pm
Quick Share

பெரியாரின் இறுதி பேரூரை புத்தகத்தை வாசித்து, திமுக எம்பி ஆ.ராசாவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்தார்.

கோவை சிவானந்த காலனி பகுதியில் பாஜக நிர்வாகிகள் தொண்டர்களை கைது நடவடிக்கை, திமுக அரசு, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம், ஆ ராசாவின் கருத்து உள்ளிட்ட சம்பவங்களை கண்டித்து பஜகவினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தேசிய மகளீரணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மூத்த தலைவர் சிபி ராதகிருஷ்ணன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் குண்டு வீசியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய், ராசவை கைது செய் உள்ளிட்ட பதாகைகள் ஏந்தி கண்டன கோசங்களையிட்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாஜக தொண்டர்களை போலீசார் முழு பரிசோதனைக்கு பின்பு அனுமதித்தனர்.

இதனை தொடர்ந்து மேடையில் அண்ணாமலை பேசியதாவது :- மூன்று கிலோ மீட்டர் தள்ளி சிறைக்குள் பாலாஜி உத்தம ராமசாமி உள்ளார். தற்போது ஆயிரம் பாலாஜிகள் திரண்டு வந்து இருக்கிறீர்கள். சரித்திர கூட்டமாக இந்த கூட்டம் அமைந்துள்ளது. கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது காவல் துறை ஏவல் துறையாக நடந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு வார்த்தை பேசவில்லை. ஆ ராசாவை கிரேக்க வரலாற்றில் சாகா வரம் வேண்டும் என கடவுளிடம் குதிங்காலாக அடித்தால் போதும் திமுக அரசு. 2 ஜி ஊழல்வாதி ராசா.

ராசா பேசிய பேச்சுக்கள் திமுகவிற்கு புதிதல்ல. சமூக வலைதளத்தில் எதை பேசினாலும், உடனடியாக பார்க்க முடியும். ஒருவார்த்தை பேசினாலும் 8.5 கோடி பேர் பார்த்துவிடுவார்கள். அறிவாலயத்தில் ஒரு பிரச்சனையை மறைக்க அடுத்த பிரச்சனை என்ன செய்யலாம் என திமுக தலைவர்கள் ஆலோசனை செய்து வருகிறார்கள். 15 மாத காலமாக தஞ்சாவூர் முதல் கனியமூர் பள்ளி வரை பல்வேறு பிரச்சனைகளுக்கு வாய்திறக்கவில்லை. பாஜகதான் பேசுகிறது.

காவல்துறை தடியடி நடத்துவதில் பாஜக தொண்டர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்.ஆ ராசாவிடம், நீங்கள் பேசுகின்ற அனைத்தையும் தந்தை பெரியாரின் மரண சாசான புத்தகத்தில் இருந்து பேசியதாக சொன்னீர்கள். அதே புத்தகத்தில் 21ஆம் பக்கத்தில், “நாதியில்லையே, சிந்திக்க நாதியில்லையே பொண்டாட்டியை தவிர என்னென்ன கொடுக்கிறான். அவனுக்கு ஓட்டுதான் பெரிது. இன்னும் கொஞ்ச நாள் போன பொண்டாட்டியை கூட கூட்டி கொடுப்பான்,” என பெரியார் சொல்லி இருக்கிறார். இதை நான் சொல்லவில்லை, பெரியார்தான் சொன்னார். இதற்கு பெயர் தான் திராவிட மாடல் என முதலமைச்சர் சொல்வதாக தெரிவித்தார்.

மத்திய அரசு பிஎஃப்ஐ சார்ந்தவர்கள் 105 பேரை கைது செய்தனர்.கேரளா வல்லபுரத்தில் என் ஐ ஏ அதிகாரிகள்,தவறு செய்த குற்றவாளிகளை, கைது செய்து, உடனடியாக டெல்லி கோர்ட்டில் நிறுத்தி சிறைக்கு அனுப்பிவிட்டார்கள். எனக்கு ஐபிஆர்சி சட்டம் தெரியும். கேரளாவை போல் இங்கு இருக்கிற தீவிரவாதிகளுக்கும், பயஙகரவாதிகளுக்கும் நடக்கும் என்பதை முதலமைச்சர் உணர்ந்துகொள்ள வேண்டும். முதலமைச்சர் நான் கடவுள் நான் கடவுள் என்று சொல்லி வருகிறார். அவரை நம்பக்கூடிய நான்கு அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆத்துல குளிச்சுகிட்டு சேத்துல நடந்து வருகிறவனை பார்த்து நாங்க நகர்ந்து செல்கிறோம்.

மது பழக்கத்தில் உள்ள 1 கோடியே 10 லட்சம் பேரை மீட்டு கொண்டு வர ஆட்சிக்கு வர நினைக்கிறோம். எம்எல்ஏக்கள் தாலுக்கா மற்றும் அரசு அலுவலகங்களில் இருந்து மக்கள் பணி செய்யாமல் லஞ்சத்தின் பின்னால் ஒடுகின்றனர். கனிமவள கொள்ளை, விவசாயம் செய்ய நிலத்தை அதிகரிப்போம் என சொன்ன திமுக, இதுவரை நாற்று நடவு செய்ய முதலமைச்சர் வந்தால் சில எடுபிடிகள் எடுத்து வருவார்கள்.

கோவை மாநகராட்சியில் 3320 கோடி வரிகள் மூலம் வருமானம் வருகிறது. மேலும் 350 கோடி சொத்துவரி உயர்வால் கிடைத்துள்ளது. கோவையில் தெருநாய்கள் தொல்லை, மனிதன் நடமாட முடியாத சாலைகள், அமைச்சர்கள் பெண் மேயரை அடிமையாக நடத்துகிறார்கள்.

ஆர் எஸ் பாரதி பட்டியலின மக்களை பேசியிருக்கிறார். கேகேஎஸ்எஸ் ஆர் நரிக்குறவ பெண்ணை அவமானப்படுத்துகிறார். ராஜகண்ணப்பன் தாழ்த்தப்பட்ட அதிகாரியை மிரட்டிய வழக்கும் நிலுவையில் இருக்கிறது. ஒசிக்கு பிறந்தவர் பொன்முடி ஓசியில் போவதாக பேசுகிறார். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத திமுக, பாஜக நிர்வாகிகளை கைது செய்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது, என்றார்.

திமுக எம்எல்ஏ தாம்பரத்தில் தொழிலதிபரை மிரட்டியவரை எப்ஐஆர் மட்டும் போட்டு விட்டு விட்டார்கள். அவரை கைது செய்யவில்லை.

பரம்பிக்குளம் அணையில் ஒரு மதகு உடைந்து 6 டிஎம்சி தண்ணீர் வீணாக போகிறது. பரம்பிக்குளம் அணையில் சரியாக பராமரிப்பு செய்யாததால், 80 லட்சம் ரூபாய் லஞ்சமாக வாங்கிவிட்டு, 15 லட்சம் ரூபாய் செலவு சரியாக செய்யாததால் தண்ணீர் வீணாகியுள்ளது. 40 அடிக்கு மேல் சிறுவாணியில் தண்ணீர் உயர்த்த கேரள அரசு மறுக்கிறது.

மாநகராட்சி, தென்னை நார் தொழிற்சாலைகளை ஆரஞ்ச் நிறத்திற்கு மாற்றிவிட்டு, அதிலும் கமிஷன், கட்சிக்குள் பதவி வாங்க பணம், ஏற்றிய மின்சார கட்டணத்தை குறைக்க காசு, என கோவை சொத்தை சுரண்டி சுரண்டி கோபாலபுர குடும்பத்தை வளப்படுத்த நினைக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி என குற்றம் சாட்டினார்.

ஆக்ஸ்ட் 1 ராமன் படத்தை எரிக்க வேண்டும் என்றார். ராமாயணம் எதிர்ப்பு போரட்டம் 1966ல் எரித்தனர். ராமனை வைத்து 15 ஆண்டுகள் அரசியல் செய்தனர். இன்றைக்கு உலகம் முழுவதும், கம்பன் கழகம் இருக்கிறது. அதற்கு காரணம் திமுகதான். அதே போல சனாதன தர்மத்தை பட்டி தொட்டியெல்லாம் திமுகவினர் கொண்டு செல்கிறார்கள் என்றார்.

எங்கள் மீது கைவைத்த காவல் துறையினர், இரண்டு ஆண்டுகள் கழித்து பணி ஓய்வு பெறும் போது பென்சன், பணம் கிடைக்கவில்லையென்றால், நாங்கள் பொறுப்பல்ல. 90% காவலர்கள் நேர்மையானவர்கள். இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கொள்ளுங்கள். 2024 பாராளுமன்ற தேர்தலோடு சட்ட சபை தேர்தலும் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல.

முதலமைச்சர் நடுநிலையாக நடந்துகொள்ளும் வரை பாஜக விடாது. ஐந்தாண்டுகள் ஆட்சியை நல்லபடியாக முடித்துவிட்டு செல்லுங்கள். முதலமைச்சரின் கையில்தான் பாஜகவின் செயல்பாடு இருக்கிறது, என அண்ணாமலை பேசினார்.

Views: - 479

0

0