அதிமுகவுடன் கூட்டணி மாறுமா? பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தகவல்!!

By: Udayachandran
15 October 2020, 3:14 pm
BJP Annamalai - Updatenews360
Quick Share

ஈரோடு : தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் கூட்டணி மாறுவதற்கான வாய்ப்பு குறித்து பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்த மசோதா குறித்த விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டம் அக்கட்சியின் விவசாய அணித் தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் தெளிவான , நேர்கோட்டுப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் , அதிமுக பாஜக கூட்டணி பல கொள்கைகளில் ஒத்துப் போவதாகவும் , கூட்டணியில் குழப்பம் இல்லாமல் இருப்பதாக கூறினார்.

தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருப்பதால் , கூட்டணி மாறுவதறக்கான சாத்தியம் இப்போதைக்கு இல்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பாக திமுக நடத்தும் போராட்டம் முட்டாள்தனமானது.

மத்திய அரசு சிபிஜ மற்றும் நீதிமன்றங்களை சுதந்திரமாக செயல்பட அனுமதியளித்துள்ளதாகவும் , முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சிபிஐ கூண்டுக்குள் அடைத்த கிளி போல் இருந்த்தாகவும் தெரிவித்தார்.

Views: - 178

0

0