மதுபோதையில் ரகளை… தட்டிக் கேட்ட போலீசுக்கு பிளேடால் கீறல் : வடமாநில இளைஞர் கைது!!
Author: Udayachandran RadhaKrishnan23 August 2021, 4:29 pm
கோவை : கோவையில் ஓட்டலில் தகராறு செய்து கொண்டிருந்த வடமாநில வாலிபரை தட்டிக்கேட்ட போலீசுக்கு பிளேடால் கீறல் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 22). இவர் கோவை புதூர் பகுதியில் குடோனில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மதுபோதையில் கோவை புதூர் பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்ற ரவிக்குமார் அங்கு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அங்கிருந்த போலீஸ்காரர் ஆறுமுகம் என்பவர் பார்த்து ரவிக்குமாரை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவிக்குமார் தனது கையில் வைத்திருந்த பிளேடால் ஆறுமுகத்தை கீறியுள்ளார்.
இதுகுறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் ரவிக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தவறைத் தட்டிக் கேட்ட போலீஸ்காரருக்கு பிளேடு கீறல் விழுந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0