கோவை, திருப்பூரில் வெளுத்து வாங்கிய மழை : மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் ஹேப்பி!!

16 May 2021, 7:44 pm
Cbe Tirupur Rain- Updatenews360
Quick Share

திருப்பூர் : உடுமலை சுற்றுவட்டார  பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழையால் சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் குடிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் சூறாவளி காற்று வீசியதால் மக்கள் கடும் வெப்பத்தால் அவதியடைந்து வந்த நிலையில் இன்று மாலை வானம் மேக மூட்டமாக காணப்பட்டது.

இந்தநிலையில் மாலை 4 மணி முதல்  ஆங்காங்கே பரவலாக மழை வெளுத்து வாங்கி வருவதால்  பொதுமக்கள் ,விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் இடைவிடாது  கனமழையால் ஒருவித குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவது பொது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தற்போது பெய்துள்ள மழையால் மானாவாரி சாகுபடி நிலங்களில் மக்காச்சோளம் போன்ற பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்ற வாய்ப்பு உள்ளதாகவும்  கேரளாவில் பருமழை துவங்கி  இருக்கும்  நிலையில் உடுமலை பகுதியில் மழை பெய்ய துவங்கி உள்ளது என  விவசாயிகள் தெரிவித்தனர்.

Views: - 72

0

0