கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து : பைக் மீது கார் மோதி கோரம்… இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2022, 10:35 pm

பழனி : நாகூர் பிரிவில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நாகூர் பிரிவு என்ற இடத்தில் சேலத்தில் இருந்து பழனி நோக்கி வந்த இருசக்கர வாகனமும், பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்து விட்டு கேரளாவுக்கு சென்ற காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சேலத்தைச் சேர்ந்த சங்கர் (வயது 33), முருகேசன் (வயது 43) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த சாமிநாதபுரம் காவல்துறையினர் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சாமிநாதனகாவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு சக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் ஒரே நேரத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?