உஷார் மக்களே: கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் திருடும் சிறுவன்…அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

Author: Aarthi Sivakumar
25 July 2021, 9:45 am
Quick Share

கோவை: உக்கடம் மீன் மார்க்கெட்டில் லாவகமாக செல்போன் திருடும் சிறுவன் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே, ஞாயிற்று கிழமை நாட்களில் மீன் மார்கெட்டில் அசைவ பிரியர்களின் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் கோவை உக்கடம் மீன் மார்கெட்டில் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதின.

இந்நிலையில் மீன் வாங்குவதாக வந்த சிறுவன் ஒருவன் சக வாடிக்கையாளரிடம் செல்போனை லாவகமாக திருடியுள்ளான். மீன் வாங்க வந்த பையன் பையை வைத்து மறைத்து அலைபேசி உரிமையாளருக்கே தெரியாமல் திருடுகின்றான்.

மீன் மார்கெட் மட்டுமின்று காய்கறி மார்கெட்டிலும் பல செல்போன்கள் திருடு போயுள்ளது. சிறுவன் மீன் மார்கெட்டில் நடத்திய கைவரிசையினை காய்கறி மார்கெட்டிலும் காட்டியதாக தெரிகின்றன. இந்த நிலையில் மீன் மார்கெட்டில் தொலைபேசி களவாடிய காட்சிகளை கொண்டு சிறுவனை தேடிவருகின்றனர்.

Views: - 258

0

0