காதலியை கத்தியால் குத்திவிட்டு காதலன் தற்கொலை : பணமிருந்த போது இனித்த காதல் கசந்தது!!

29 January 2021, 7:02 pm
Chennai Murder Suicide - Updatenews360
Quick Share

சென்னை : காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திவிட்டு ஒருதலைக்காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் புத்தகரத்தை சேர்ந்தவர் ஆத்திமுத்து என்பவரது மகள் பிரேமலதா(வயது 22) என்பவரும் அதே பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரது மகன் சுதாகரன் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வந்த சுதாகரனுக்கு தற்போது வேலை இல்லாததால் அவரை காதலிக்க பிரேமலதா மறுத்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த இளைஞர் சுதாகர் பிரேமலதாவின் வீட்டிற்குள் புகுந்து அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார்.

படுகாயமடைந்த பிரேமலதாவை அவரது தாயார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்து புழல் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து தப்பியோடிய சுதாகரனை போலீசார் தேடி வந்த நிலையில் மாதவரம் வி.எஸ்.மணி நகர் பகுதியில் சாலையோரத்தில் உள்ள உயர் மின் கோபுரத்தில் தூக்கிட்டு சுதாகர் தற்கொலை செய்து கொண்டார்.

உடலை மீட்டு போலீசார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கத்திக்குத்தில் படுகாயமடைந்த பிரேமலதா ஆபத்தான நிலைமையில் உள்ளார். புழல் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 26

0

0