இன்ஸ்டாகிராமில் பழக்கம்.. தனியாக வசித்து உருகி உருகி காதலித்த ஜோடி : மதம் மாறாத காதலி.. அந்தரங்க போட்டோக்களை வெளியிட்ட காதலன்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 May 2022, 8:07 pm
tirupur insta - Updatenews360
Quick Share

திருப்பூர்: இன்ஸ்டாகிராமில் பழக்கமான நபருடன் ஒன்றாக வாழ்ந்த பெண்ணை மதம் மாற்ற வற்புறுத்தி ஒன்றாக இருந்த போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரை சேர்ந்த இமான் ஹமீப் என்பவர் கரூரை சேர்ந்த பவித்ரா (வயது 21) என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்துள்ளார்.

இருவரும் திருப்பூரில் ஒன்றாக தங்கி இரண்டு மாதம் வாழ்ந்த நிலையில் பவித்ராவை மதம் மாற்ற இமான் ஹமீப் வற்புறுத்தி வந்ததாகவும் மதம் மாற பிடிக்காததால் அவரிடமிருந்து பிரிந்து சென்ற நிலையில் இருவரும் ஒன்றாக இருந்த போது எடுத்த அந்தரங்க புகைப்படங்களை இமான் ஹமீப் சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக கடந்த 4ம் தேதி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பவித்ரா புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த நல்லூர் போலீசார் ஜாதியை சொல்லி திட்டியது, பெண்ணை கொடுமை செய்தது, அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இமான் ஹமீப் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Views: - 881

0

1