அரசு வேலை வேண்டுமென்றால் அரவணைக்க வேண்டும் : கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணிடம் திமுக பிரமுகர் அத்துமீறல்… காவல்நிலையம் முற்றுகை!!

Author: Udayachandran RadhaKrishnan
11 May 2022, 7:41 pm
DMk - Updatenews360
Quick Share

விருதுநகர்: மம்சாபுரம் கிராமத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கணவனைப் பிரிந்து தனது தாய் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்ப வருமானத்திற்காக அப்பளம் மற்றும் வெள்ளைபூண்டு வியாபாரம் செய்து வருகிறார்.

வீடு வீடாகச் சென்று விற்று அதில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார். இந்நிலையில், முன்னாள் பேரூர் கழக துணைத் தலைவரும், திமுக பிரமுகருமான அய்யனார் என்பவர் கடந்த இரண்டு மாதங்களாக பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.மேலும் பெண்ணிற்கு அரசு வேலை வாங்கித் தருவதாகவும் அதற்காக தான் சொல்லும் கட்சி முக்கிய பிரமுகர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் எனவும் வற்புறுத்தியுள்ளார். அவர் வற்புறுத்தலுக்கு இணங்க மறுத்ததால் தொடர்ந்து பெண்ணிற்கு மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

‘இதனைத் தொடர்ந்து, தனது அடியாள்களுடன் பெண்ணின் வீட்டிற்குச் சென்ற அய்யனார், ‘நான் சொல்லுவதை கட்டாயம் கேட்க வேண்டும்’ என மிரட்டல் விடுத்து பெண்ணையும் அவரது தாயாரையும் தாக்கியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த அப்பெண் மற்றும் அவரது தாயார் இதுதொடர்பாக மம்சாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆனால், காவல் துறையினர் புகாரின் பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அப்பெண் திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துறை தலைவர் ஆகியோருக்கும் புகார் மனு அளித்தார்.

ஆனால், இதுவரையும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட பெண், திமுக பிரமுகர் அய்யனார் மற்றும் அவருடன் வந்த அடியாள்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தனது உறவினர்களுடன் மம்சாபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 453

0

0