ஆள் இல்லாத வீடுகளில் நோட்டம்: பின்புற கதவை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை..!!

Author: Aarthi
26 July 2021, 5:24 pm
Quick Share

கோவை: சாய்பாபா காலனி கே. கே. புதூர் பகுதியில் கதவை உடைத்து 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சாய்பாபா காலனி கே கே புதூர் அருகே உள்ள ரத்தினசபாபதி ரோட்டை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவரது மனைவி சந்திரகலா. இவர்கள் கடந்த வாரம் தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றனர். இவரது வீட்டு வேலைக்காரப் பெண் நேற்று வீட்டிற்கு வந்து சுத்தம் செய்து சென்றுள்ளார்.

பின்னர் அவர் இன்று வந்து பார்க்கும்போது பின் கதவு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து வீட்டின் உரிமையாளருக்கும், சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சென்னையில் இருக்கும் சந்திரகலாவிடம் தொலைபேசி மூலமாக விசாரணை நடத்தினர்.

அதில் வீட்டின் பீரோவில் 25 பவுன் தங்க நகைகள், வைர நெக்லஸ் மற்றும் வெள்ளி குடம் மற்றும் ரூ.25,000 ஆகியவற்றை வைத்திருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்றுள்ள இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 199

0

0