பீர் கூலிங்கே இல்ல…பீர் பாட்டிலை உடைத்து கத்தியை காட்டி மிரட்டல் : மதுபானக்கடையில் ரகளை செய்த இளைஞர்கள் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2022, 9:21 am
Pondy Beer Bottle Problem -Updatenews360
Quick Share

புதுச்சேரி : தனியார் மதுபானக்கடையில் பீர் கூலிங் இல்லாத காரணத்தால் பீர் பாட்டிலை உடைத்து மிரட்டல் விடுத்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி, மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு மது வாங்க வந்த 3 இளைஞர்கள் கடையின் ஊழியரிடம் பீர் கேட்டுள்ளார். அப்போது பீர் கூலிங்காக இல்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டு பீர் பாட்டைலை உடைத்து கத்தியை வைத்து அங்கிருந்தவர்களை மிரட்டல் விடுத்து சென்றனர்.

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக கடையின் ஊழியர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மதுபானக்கடையில் பொருத்தப்பட்டு இருந்து சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது ரகளையில் ஈடுபட்டவர்கள் ஜய்யங்குட்டி பாளையம் பகுதியை சார்ந்த திருமூர்த்தி மற்றும் தருமபுரி பகுதியை சார்ந்த மணிகண்டன் மற்றும் விஜய் என்பதும் தெரியவந்தது. பின்னர் மூவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 707

0

0