தொடர் விலை உயர்வுக்கு பிறகு வாகன ஓட்டிகளுக்கு கொஞ்சம் ஆறுதல்தான் : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2022, 8:34 am
Petrol Rate - Updatenews360
Quick Share

சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது வாகன ஓட்டிகளை கவலை அடைய செய்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 9 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 18 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

நேற்றைய விலையான பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Views: - 1168

0

0