தமிழகத்தில் இருந்து லஞ்சம், குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும் : மக்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 August 2022, 1:22 pm

சென்னை பா.ஜக அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தேசிய கொடி ஏற்றினார். இந்த நிகழ்வில் குஷ்பு , எச்.ராஜா , கருநாகராஜன் மற்றும நிர்வாகிகள் இருந்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, 75 வது சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து பிரதமர் குடும்ப அரசியல் பற்றி சொல்லியிருக்கிறார்.

இந்தியாவில் குடும்ப அரசியல் என்பது ஜனநாயகத்தை முழுமையாக மலர செய்யாமல் , சில மனிதர்களை மட்டும் அந்தந்த சமுதாயத்தை சார்ந்தவர்கள் மேலே வருவதற்கு காரணமாக இருக்கிறது.

ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குடும்ப அரசியலை ஒழித்து கட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். தமிழ் நாட்டில் மிக முக்கியமாக லஞ்சம் மற்றும் குடும்ப அரசியல் தலை விரித்து ஆடுகிறது.

குடும்ப அரசியலை அப்புறபடுத்தி , உண்மையான ஜனநாயகத்தை கொண்டு வர பாஜக கடுமையாக உழைக்கும் என பேசினார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?