மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள் : வழிநெடுக பார்வையாளர்கள் உற்சாகம்!!

16 January 2021, 7:46 pm
Cow cart Race - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 48 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

தைப்பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள சூரங்குடியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெறுவது வழக்கம்.அதேபோல இந்தாண்டும் கொரோனாவின் தாக்கம் குறைந்ததால் சூரங்குடியில் தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

பூச்சிட்டு, நடுமாடு, பெரிய மாடு என 3 வகையில் மாட்டு வண்டி போட்டிகள் நடைபெற்றன. இதில் தூத்துக்குடி , ராமநாதபுரம் , திருநெல்வேலி , விருதுநகர், மதுரை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 48 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

சூரன்குடியிலிருந்து அரியநாயகிபுரம் கிராமம் வரை சுமார் 14 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். காளைகள் சீறி பாய்ந்து சென்றன. கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக கொரோனா பரவல் காரணமாக வீட்டிலேயே முடங்கி இருந்த மக்களும், மாட்டுவண்டி பந்தய ரசிகர்களும் ஏராளமானோர் சாலையின் இரு புறமும் கூடியிருந்து இப்போட்டியை கண்டுகளித்தனர்.

போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், மாடுகளை ஓட்டிவந்த சாரதிகளுக்கும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் பரிசு தொகையை வழங்கினார்.

Views: - 0

0

0