இலங்கை ரோந்து கப்பல் மோதி உயிரிழந்த புதுக்கோட்டை மீனவர்: மரியாதை செலுத்தி உடல் அடக்கம்..!!

Author: Aarthi Sivakumar
23 October 2021, 6:30 pm
Quick Share

புதுக்கோட்டை: இலங்கை கடற்படையின் ரோந்து படகு மீது மோதி கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்தபோது அவர்களின் படகின் மீது இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மோதியதில், கடலில் மூழ்கி மீனவர் ராஜ்கிரண் இறந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், சுகந்தன், சேவியர் ஆகிய இரு மீனவர்கள் இலங்கைச் சிறையில் உள்ள நிலையில் மீனவர் ராஜ்கிரண் உடலைத் தேடிக் கண்டுபிடித்த இலங்கைக் கடற்படை இந்தியக் கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர்களிடம் இருந்து உடலைப்பெற்றுக்கொண்ட மீன்வளத்துறையினர் படகில் கோட்டைப்பட்டினத்துக்கு எடுத்துச் சென்று குடும்பத்தினடம் ஒப்படைத்தனர். மீனவர்கள், உறவினர்கள் மரியாதை செலுத்திய பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Views: - 185

0

0