2 மாதங்களுக்கு பின் இயங்கிய பேருந்து சேவை : பிற மாவட்டம் செல்ல பேருந்துகளை அதிகரிக்க திருப்பூர் மக்கள் கோரிக்கை!!

5 July 2021, 9:27 am
Tirupur Bus Starts - Updatenews360
Quick Share

திருப்பூர் : இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று முதல் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் பேருந்து சேவை துவங்கி உள்ளது. கொரோனா இரண்டாவது அலை தீவிரம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் தமிழக அரசு 50 சதவீத பயணிகளுடன் பேருந்தை இயக்கலாம் என அறிவித்தது.

இதனையடுத்து இன்று திருப்பூர் மாவட்டத்திற்கு உள் பயணிக்க 166 பேருந்துகளும் திருப்பூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பயணிக்க 167 பேருந்துகளும் என 333 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே பேருந்தில் பயணிக்க அனுமதிக்கிறது. திருப்பூர் நகர பேருந்துகளில் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது என்றாலும் பிற மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளான சேலம், திண்டுக்கல், மதுரை செல்லும் பேருந்துகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே பிற மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை அதிகரித்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Views: - 298

0

0