கோவை ஈச்சனாரி அருகே பேருந்து – வேன் மோதல் : இரண்டு பேர் பலி!!

18 January 2021, 11:10 am
Accident 2 Dead - Updatenews360
Quick Share

கோவை : ஈச்சனாரி அருகே பழனி கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய ஆம்னி பேருந்து மற்றும் வேன் மோதிய விபத்தில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரிசிபாளையத்தை சேர்ந்தவர் நடராஜ் (வயது 64). இவரது மனைவி ராஜாமணி (வயது 60). இவர்கள் தனது 7 மற்றும் 11 வயது பேரன்களுடன் பழனி முருகன் கோவிலுக்குன் சென்றுவிட்டு இன்று ஆம்னி வேனில் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

வேனை டிரைவர் முகம்மது ஆசிக் (வயது 38) என்பவர் ஓட்டி வந்தார். கோவை ஈச்சனாரி ஜங்ஷன் அருகே காலை 5 மணி அளவில் வரும்போது நாகூரில் இருந்து கோழிக்கோடு நோக்கி சென்ற ஆம்னி பேருந்து எதிர்பாராதவிதமாக வேன் மீது நேருக்கு நேர் பலமாக மோதியது.

இந்த விபத்தில் ஆம்னி வேனின் முன் பகுதி முழுவதுமாக நெருங்கியது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அந்த வழியாக சென்றவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் டிரைவர் முகமது ஆசிக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்சீட்டில் அமர்ந்திருந்த ராஜாமணி வேனில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது உடலில் காயங்கள் இல்லை. அதிர்ச்சியில் பலியாகியுள்ளார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பலியான 2 பேரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த நடராஜ் உட்பட 3 பேர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 7

0

0