சினிமாவை மிஞ்சிய கடத்தல் சம்பவம் : தொழில் பார்ட்னரான பெண்ணை அடைத்து வைத்து பல கோடி ரூபாய் கேட்டு மிரட்டல்… வீடியோ வௌயிட்டு கதறல்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 October 2022, 11:52 am

தொழில் பார்ட்னர் அழைத்துச் சென்று அடைத்து வைத்து பல கோடிக்கு செக் கையெழுத்து பெற்றுக் கொண்டு தன்னை துன்புறத்துவதாக கதறும் பெண் . வைரலான வீடியோ

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையம் பகுதியை சேர்ந்த பிரவீனா, சேகர் தம்பதியினர். கணவர் வெளியூரில் வேலை பார்த்து வரும் நிலையில் மங்கலம் சாலை பகுதியில் அப்பெண் பியூட்டி பார்லர் அழகு நிலையம் நடத்தி வந்தார்,
இந்நிலையில் வாடிக்கையாளராக வந்து செல்லும் செட்டிபாளையம் சாலை அருகே வசிக்கும் தமிழ்செல்வி அவரது கணவர் சிவகுமார் என்பவர் டெக்ஸ்டைல்ஸ் தொழில் செய்யலாம் என்று வீட்டை வங்கி கடன் வைத்து கடன் 75000 வரை பெற்று கொண்டு தொழில் செய்ததாக மேலும் சுமார் மூன்று கோடி ரூபாய் பணம் வரை பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது வீட்டு சொத்து பத்திரம் ஏலத்துக்கு வந்த நிலையில் பணத்தை திருப்பி கேட்க முயன்ற போது தொழில் விஷயமாக வெளியூர் அழைத்துச் செல்வதாக கூறி அழைத்துச் சென்று திருச்சி பகுதியில் தன்னை அடைத்து வைத்து சில பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டதாகவும் மேலும் தன் தாய் தந்தையிடம் தனக்கு அவப் பெயரை ஏற்படுத்தி விட்டதாகவும் மேலும் தான் வேறு எங்கும் செல்ல இயலாத சூழ்நிலையை உருவாக்கி விட்டதாகவும் தன்னை காப்பாற்றும் படி அப்பெண் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த சூழ்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பே பிரவீனாவின் தாய் ஸிலோ மீனா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காணாமல் போன வழக்கை பதிவு செய்த பல்லடம் போலீசார் தேடி வரும் நிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!