இனி குவியும் குப்பைக் கழிவுகள் : மகாத்மா காந்தியிடம் மனு கொடுத்து தூய்மை பணியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 October 2022, 12:10 pm
Cbe Scavengers Proteswt - Updatenews360
Quick Share

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் காந்தியிடம் மனு கொடுத்து போராட்டத்தை
தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை துவக்கினர்.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோவையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சி நிர்வாகத்தில் மனு கொடுத்து பலனில்லை என்று மஹாத்மா காந்தியிடம் மனு கொடுத்த மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்.

ஊதிய உயர்வு, பணி நிரந்திரம், ESI,PF, போன்ற அரசின் சலுகைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் கோவை மாநகராட்சி முன்பு காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக இரண்டுமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு ஏற்படாததால் காந்தி ஜெயந்தியான இன்று முதல் காலவறையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளார்கள்.

இதனால் மாநகராட்சி பகுதிகள், பள்ளிகள், அலுவலகங்களில் குப்பைகளும், கழிவுகளும் தேங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் தொழிலாளர்களின் பிரச்சினைகளை சரியாக அனுகாததும், நிர்வாக கோளாருமே இதற்கு காரணம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Views: - 336

1

0