விவசாயிகள் வாழ்வில் பன்னீர் தூவும் பன்னீர் ரோஜா.! லாபம் கிடைப்பதாக மகிழ்ச்சி.!!

17 August 2020, 12:39 pm
Sathy Rose - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பன்னீர் ரோஜா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். வழக்கமாக மல்லிகை, செண்டுமல்லி, சாமந்திப்பூ மற்றும் முல்லை பூக்களைப் பயிரிடும் விவசாயிகள் தற்போது பன்னீர் ரோஜா சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.

பன்னீர் ரோஜா பயிரிட சொட்டு நீர் பாசனம் போதுமானதாக உள்ளதாகவும் நல்ல உரங்களை கொண்டு ஆறுமாதத்தில் பூக்கள் நன்கு விளைந்து நல்ல பலன் அளிப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தற்போது பன்னீர் ரோஜா பூக்கள் ஒரு கிலோ 70 முதல் 100 ரூபாய் வரை தனியார் நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது என தெரிவிக்கும் விவசாயிகள் பன்னீர் ரோஜா சாகுபடி மூலம் வருடத்திற்கு 75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நல்ல லாபம் கிடைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறைந்த முதலீடு சொட்டுநீர் பாசனம் என்பதால் சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஏராளமான விவசாயிகள் தற்போது பன்னீர் ரோஜா சாகுபடியில் பெருமளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Views: - 49

0

0