நடுரோட்டில் பட்டாகத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் : தொடரும் இளைஞர்களின் அட்டகாசம்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2023, 10:44 am

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஓடை பிள்ளையார் கோவில் அருகே வேலூரில் இருந்து காட்பாடி சித்தூர் செல்லும் சாலையில் நேற்று நள்ளிரவு மூன்று இளைஞர்கள் யமஹா பைக்கை நிறுத்திவிட்டு அதன் மீது பிறந்தநாள் கேக்கை வைத்து அதை பட்டாகத்தியை கொண்டு வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்

அதோடு இல்லாமல் பிறந்த நாள் கொண்டாடியதாக பூவரசன் என்ற இளைஞருக்கு ஆள் உயர பூ மாலை அணிவித்து, சரவெடிகளை கொளுத்தி நடுரோட்டில் வீசி பந்தா காட்டியுள்ளனர்.

மிகவும் பரபரப்பான சாலையில் நள்ளிரவில் சாலையோரம் கையில் பட்டாசு பட்டா கத்தியுடன் நின்று கேக் வெட்டி இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதோடு அந்நேரத்தில் அவ்வழியாக பயணித்த பாதுசாரிகள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?