புதுச்சேரி சிறைக்குள் மினிவேனில் கஞ்சா கடத்தல் : ரவுடிக்கு உதவிய ஓட்டுநர் கைது
Author: kavin kumar27 ஜனவரி 2022, 1:41 மணி
புதுச்சேரி : புதுச்சேரியில் இரட்டை கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ரவுடிக்கு மினிவேன் கதவில் மறைத்து எடுத்து செல்லப்பட்ட 250 கிராம் கஞ்சா, 4 செல்போன்கள், போதை வஸ்துகளை ஆகியவற்றை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஓட்டுநரை கைது செய்தனர்.
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைச்சாலை உள்ளது. இதில் 250க்கும் மேற்பட்ட தண்டனை மட்டும் விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று குடியரசு தின விழா சிறை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதற்காக சிறை வளாகத்திற்குள் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. விழா முடிந்த பிறகு பந்தலை கழற்றி கொண்டு செல்ல டாடா ஏஸ் மினி வேன் சிறை வளாகத்துக்குள் வந்தது. சிறைக்குள் வரும் வாகனங்களை சிறை காவலர்கள் சோதனையிடுவது வழக்கம் அது போல் மினி வேனின் கதவுகளை திறந்து சிறை காவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது வாகனத்தின் கதவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 செல்போன்கள் , 10 பீடி கட்டு , 10 ஹான்ஸ் பாக்கெட், 250 கிராம் கஞ்சா, ஒரு சிம்கார்டு , 4 லைட்டர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, செல்போன்கள் மற்றும் கஞ்சாவை சிறைக்கு கொண்டு வந்த ஓட்டுநர் பாஸ்கரன் என்பவரை பிடித்து காலாப்பட்டு போலீசில் சிறை காவலர்கள் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வாணரப்பேட்டை இரட்டை கொலை வழக்கில் உள்ள ரவுடி சார்ப் விக்கி, தூண்டுதலில் பேரில் தான் செல்போன்கள், கஞ்சா உள்ளிட்டவைகளை சிறைக்கு எடுத்துவரப்பட்டது தெரியவந்துள்ளது.
0
0