“ஆன்லைன் வகுப்பு புரியவில்லை“ : 10ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு!!

16 September 2020, 11:32 am
10th Student Suicide- updatenews360
Quick Share

சிவகங்கை : திருப்புவனம் அருகே ஆன்லைன் வகுப்பு புரியாததால் 10ஆம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே செல்லப்பனேந்தலைச் சேர்ந்தவர் சத்யமூர்த்தி (வயது 40 ). ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும் சுபிக்ஷா (வயது 15), சுமன் (வயது 12) என்ற மகனும் உள்ளனர்.

சுபிக்ஷா மதுரை நிர்மலா மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இந்தாண்டு 10ம் வகுப்பு செல்ல உள்ளார். தினசரி மதுரைக்கு அரசு பேருந்தில் பள்ளிக்கு சென்று வருவது உண்டு. பள்ளி மற்றும் மாநில, மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி மதுரை மாவட்ட அளவில் பேச்சு போட்டியில் வெற்றி பெற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையால் சுபிக்ஷா பரிசு பெற்றவர்.

ஆன்லைன் வகுப்பில் பாடங்கள் சரிவர புரியாமல் இருந்துள்ளார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால் தொடக்கத்தில் இருந்தே ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வந்துள்ளார். பாடங்கள் சரிவர புரியாமல் இருந்துள்ளது.

பொதுத்தேர்வில் வெற்றி பெற முடியாமல் போய்விடுமோ, மதிப்பெண் குறைந்து விடுமோ என மன கவலையில் இருநத் அவர் தனது தாயாரின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். உறவினர்கள் கூறுகையில் கொரானோ பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைனில் வகுப்புகள் நடந்து வருகிறது.

இதில் ஏற்பட்ட மன உளைச்சலால் தான் தற்கொலை செய்து கொண்டார். சுபிக்ஷ்வை போல நிறைய மாணவ மாணவிகள் ஆன்லைன் வகுப்புகள் புரியாமல் உள்ளதாகவும், ஆன்லைன் வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Views: - 0

0

0