கவனக்குறைவால் நடந்த கோரம்.. லாரி மீது கார் மோதி விபத்து ; ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி…!!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2023, 12:48 pm

கவனக்குறைவால் நடந்த கோரம்.. லாரி மீது கார் மோதி விபத்து ; ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அந்தனூர் பைபாஸ் சாலையில் பெங்களூர் நோக்கி கர்நாடக பதிவு எண் கொண்ட கார் சென்று கொண்டிருந்தது.

அதே சாலையில் திருவண்ணாமலை நோக்கி லாரி வந்துக்கொண்டிருந்தது. அப்போது சாலையில் சென்ற மற்றொரு காரை முந்த முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் லாரி மீது கார் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 குழந்தைகள், 4 பெண்கள், ஒரு ஆண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இடிபாடுகளில் சிக்கியவர்களை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!