அதிவேகமாக வந்த கார் மோதி பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர் : பதற வைக்கும் சிசிடிவி காட்சி வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2021, 2:44 pm
Accidnent - Updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் பலியான சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தெற்குபாளையம் பகுதியில் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கருப்பையா தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளோடு குடியிருந்து கொண்டு கட்டிட வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் பல்லடம் திருப்பூர் சாலை தெற்கு பாளையம் பிரிவில் உள்ள மெடிக்கல் ஷாப் ஒன்றிற்குச் சென்று பணம் அனுப்பி வைத்துவிட்டு நால்ரோடு பகுதியில் கடக்க முயன்றபோது திருப்பூரில் இருந்து பல்லடம் நோக்கி அதிவேகமாக வந்த ரெட் டாக்சி ஸ்விப்ட் கார் மோதியதில் பல்சர் வாகனத்தில் சென்று கொண்டிருந்த கருப்பையா தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டி தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வாலிபரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரது உடலை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் வாலிபர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பல்லடம் போலீசார் விபத்திற்கு காரணமான ரெட் டாக்சி ஸ்விப்ட் காரின் ஓட்டுனரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 335

0

0