திண்டிவனம் அருகே மரத்தில் கார் மோதி விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சோகம்!!

8 February 2021, 3:50 pm
Car Accident Dead - Updatenews360
Quick Share

விழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே திருமண நிகழ்வுக்கு சென்று வீடு திரும்பும் போது கார் விபத்துக்குள்ளாகி ஒரே குடுமபத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் இந்துமதி (வயது 41). இவர் சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தில் வேளாண்மை அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் தன் குடும்பத்தாருடன் காரில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற திருமண விழாவுக்கு சென்று விட்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார். திண்டிவனம் அடுத்த பாதிரி தேசிய நெடுஞ்சாலையில் மதியம் 12.30 மணி அளவில் வந்த போது, கார் அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இந்துமதி, அவரது கணவர் செந்தில்நாதன் (வயது 49), இவர்களது மகன் முகிலன் (வயது 24), செந்தில்நாதன் தம்பி குருநாதன் (வயது 47) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தகவல் அறிந்தவுடன் போலீசார் சம்பவ இடத்தை நேரில் சென்று பிரேதங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திண்டிவனம் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான கார் ஜேசிபி மூலம் அகற்றப்பட்டது இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .

Views: - 2

0

0