பைக் மீது கார் மோதி பயங்கர விபத்து : இரு இளைஞர்கள் பரிதாப பலி!!

12 November 2020, 2:42 pm
Accident - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே பைக் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில் பைக்கில் வந்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இ.வேலாயுதபுரத்தினை சேர்ந்தவர்கள் கார்த்திக், முனிஸ்குமார், இருவரும் மீன்பிடித்தொழில் செய்து வந்தனர். இருவரும் நேற்று இரவு ஊரில் இருந்து தருவைகுளத்தில் பைக்கில் சென்றுள்ளனர்.

கலைஞானபுரம் அருகே ஈ.சி.ஆர் சாலையில் சென்று கொண்டு இருந்த போது, எதிரே வந்த கார்நாடக பதிவு எண் கொண்ட கார் ஒன்று பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் பைக்கில் வந்த கார்த்திக், முனிஸ்குமார் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து ஏற்பட்டதும் காரில் இருந்தவர்கள் தப்பியோடி விட்டனர். இது குறித்து தகவல் கிடைத்தும் குளத்தூர் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று இருவரின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து காரில் இருந்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக ஈசிஆர் சாலையில் சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Views: - 16

0

0